கோவிப்பட்டி சம்பவம் எதிரொலி: அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கிறார்களா? அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளி, உரிய பராமரிப்பு இல்லாமல் உயிரிழந்தார்.

இவரை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றி, பெரும் தொகை பணம் பறிக்கப்பட்டதும் பின்னர் உறுதியானது. இதையடுத்து, தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் தானே முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்கள் பணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுகிறார்களா என கண்காணிக்க வேண்டும் என்ற உத்தரவை ஆணையம் பிறப்பித்துள்ளது.

மேலும், மருத்துவர்களின் செயல்கள் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தாக மாறும் சூழ்நிலையை தவிர்க்க, அரசு நேரடி கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில், தீக்காயம் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய மருத்துவர் பிரபாகரன் மீது ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Government doctors Private Hospitals treatment Human Rights Commission order


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->