அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு! 7 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்! - Seithipunal
Seithipunal


 அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கிச் சலுகைகளை கட்டணமின்றி வழங்க 7 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அரசு ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு ஆகியவற்றை 7 முன்னோடி வங்கிகள் மூலமாகக் கட்டணமின்றி வழங்க, இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக நமது அரசு ஏற்பாடு செய்துள்ளது! இதற்கான MoU இன்று மேற்கொள்ளப்பட்டது.

சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவித்தபடி, தனிநபர் வங்கிக் கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றையும் வட்டிச் சலுகைகளுடன் வழங்கப் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பாடு செய்துள்ளோம்! மேலும், இன்றைய நிகழ்வில்,

211.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை புறநகர்ப் பகுதியான பிளிச்சியில் கட்டப்படவுள்ள புதிய சிறைச்சாலை - சிறைக்காவலர் குடியிருப்புகள்

சென்னை மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 457.14 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள காவலர் குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Govt CM MK Stalin Govt Staffs Insurance


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->