போதை ஊசி எடுத்த இளைஞர் உயிரிழப்பு: திருவல்லிக்கேணியில் 03 பேர் அதிரடி கைது..! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதை மாத்திரைகளின் பழக்கம் அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து ரயில் மூலமாக போதை மாத்திரைகளை சென்னைக்கு கொண்டு வருகின்றனர். இவ்வாறான நபர்களை கண்டுபிடித்து சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ராயப்பேட்டையில் உள்ள மால்களில் போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி போன்று ஏற்றிக்கொண்டு சிறுவர்கள் உட்பட பல்வேறு நபர்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இதற்கு முடிவுகட்டும் விதமாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் திருவல்லிக்கேணி பகுதியில் கடந்த 14-ஆம் தேதி மொய்தீன் என்ற இளைஞர் போதை ஊசி செலுத்திய நிலையில், அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட்டார். பின்னர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனை தொடர்ந்து மொய்தீன் தாயார் புகார் அளித்தார். அதன் பேரில் போதை மாத்திரைகள் பயன்படுத்தியது, உடம்பில் போதை செலுத்திக்கொள்வது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மொய்தீன் நண்பர்களான அமித் ஷெரிப், இனையதுல்லா, கார்த்திக் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சலீம் என்ற நபரையும் போலீசார் தேடி வருகிவதோடு, இவர்களுக்கு எங்கிருந்து போதை மாத்திரைகள் கிடைக்கின்றன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth dies after taking drug injection 03 people arrested in action in Thiruvallikeni


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->