நண்பரின் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாஜக நிர்வாகி - தென்காசியில் அதிர்ச்சி.!!
case file against bjp excuetive in thenkasi
தென்காசி மாவட்டத்தில் உள்ள, சுரண்டை பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன். தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் இவர், தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் கடந்த 2023ம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த நண்பர் வீட்டுக்கு சென்றபோது அங்கு தனியாக இருந்த நண்பரின் 15 வயது சிறுமிக்கு நீலகண்டன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இருப்பினும் சிறுமி சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து அவர்கள் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர். அதன் படி விசாரணையை மேற்கொண்ட நீதிபதி, உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் படி நீலகண்டன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
case file against bjp excuetive in thenkasi