மத்திய கைலாஷ் ‘எல்’ வடிவ மேம்பாலம்: சென்னை வாசிகளுக்கு ஒரு ‘சிக்னல்’ இல்லா பயணம்!
Unclogging Chennais Hub CM Stalin Opens the Madhya Kailash Flyover chennai
சென்னை அடையாறு மற்றும் கிண்டியை இணைக்கும் இதயப்பகுதியான சர்தார் படேல் சாலையில், நீண்ட நாள் எதிர்பார்ப்பான மத்திய கைலாஷ் ‘எல்’ வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் புற்றுநோய் நிறுவனம் போன்ற முக்கிய இடங்களைக் கடந்து செல்லும் இந்த 3.2 கி.மீ சாலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ₹61 கோடி மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஒருவழிப் போக்குவரத்து: இந்த 652 மீட்டர் நீளமுள்ள மேம்பாலம் சர்தார் படேல் சாலையிலிருந்து ஓ.எம்.ஆர் (OMR) நோக்கிச் செல்லும் வாகனங்களுக்காகச் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தடையற்ற பயணம்: இதனால் அடையாறு-கிண்டி, கிண்டி-அடையாறு மற்றும் ஓ.எம்.ஆர்-கிண்டி மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் சிக்னலில் சிக்காமல் தரைதளத்தில் தங்குதடையின்றி பயணிக்க முடியும்.
பாதுகாப்பு வடிவமைப்பு: வளைவுகளில் வாகனங்கள் கவிழாமல் இருக்க 'குறுக்குவெட்டு சாய்வு' (Superelevation) முறையில் பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும், தடுப்புச் சுவர்களின் உயரம் அதிகரிக்கப்பட்டு நவீன மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
பாலத்தின் வளைவுப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய 30 கி.மீ வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான எச்சரிக்கை பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
மேம்பாலத்தைத் திறந்து வைத்த கையோடு, முதலமைச்சர் அதில் நடைபயணமாகச் சென்று கட்டுமானத் தரத்தை ஆய்வு செய்தார். ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு இந்த 'எல்' வடிவ பாலம் ஒரு மிகப்பெரிய நேரச் சேமிப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
English Summary
Unclogging Chennais Hub CM Stalin Opens the Madhya Kailash Flyover chennai