உளுந்தூர்பேட்டை அருகே... தடுப்பு சுவரில் மோதிய வேன்! சுற்றுலா பயணிகள் படுகாயம்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 15 பேர் கடந்த செல்ல நாட்களுக்கு முன்பு ஊட்டிக்கு  வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த வேனை கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மோகன் (வயது 45 ) என்பவர் ஒட்டி சென்றார். 

இந்த வேன் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் வேனுக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கத்தி கூச்சலிட்டனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வேனில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுனர் உள்பட 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ulundurpet near van accident


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->