நீட் தேர்வு ரத்து ரகசியத்தை கூறிய உதயநிதி ஸ்டாலின்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை சிகிச்சைக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 5 மாடியில் 700 படுக்கை வசதிகளும் கூடிய மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும் 2,539 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதனிடையே அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள அரங்குக்கு மாணவி அனிதா பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். அதனையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் எங்களைப் பார்த்து நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன கேட்கின்றனர். பெரிய ரகசியம் ஒன்றுமில்லை நீட் தேர்வுக்கு எதிராக பயப்படாமல் குரல் கொடுப்பதுதான் நீட் தேர்வு ரகசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து ரகசியம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை சமூக வலைதளங்களில் பலரும் கலாய்த்து வருகின்றனர். அதற்கு காரணம் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என தெரிவித்திருந்தது.

அதுமட்டுமில்லாமல் தற்போது அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் எங்களுடைய தலைவருக்கு நீட் தேர்வு ரத்து ரகசியம் தெரியும் எனவும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanithi Stalin said NEET exam secret


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->