தூத்துக்குடி || கோவில் திருவிழாவில் சாகசம் - இருசக்கர வாகனம் மோதி இருவர் பலி.!
two youths died for stunt in thoothukudi temple festival
தூத்துக்குடி மாவட்டத்தில் குரும்பூர் அருகே உள்ள குழைக்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஜீவா என்ற ஜீவரத்தினம். இவருடைய நண்பர் அதேபகுதியை சேர்ந்த பிரதீப்குமார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் குழைக்கநாதபுரத்தில் உள்ள கட்டையன் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாவில் கலந்து கொள்ள மற்றொரு நண்பரான ஆறுமுகநேரியை சேர்ந்த பூபதிராஜாவை அழைத்துள்ளனர்.
அதன் படி 3 பேரும் நேற்று முன்தினம் இரவு கொடை விழாவில் கலந்து கொண்டு விட்டு இருசக்கர வாகனத்தில் சுற்றியுள்ளனர். இதையடுத்து மூன்று பேரும் இரவு 11.30 மணியளவில் நெல்லை - திருச்செந்தூர் சாலையில் பைக்கில் சாகசம் செய்துள்ளனர். இதில், ஜீவா, பிரதீப் ஓட்டிய இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பூபதிராஜா பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த பூபதியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
two youths died for stunt in thoothukudi temple festival