கூடுவாஞ்சேரியில் பிரபல ரவுடிகள் சுட்டுக் கொலை.! - Seithipunal
Seithipunal


கூடுவாஞ்சேரியில் பிரபல ரவுடிகள் சுட்டுக் கொலை.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரியில் போலீசார் புதுச்சேரி சாலையில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது, அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதைப்பார்த்த போலீசார் அந்தக் கரை சோதனைக்கு உபடுத்துவதற்காக தடுத்து நிறுத்தினர். ஆனால், அந்தக் கார் போலீசாரின் வாகன சோதனைக்கு நிற்காமல் சென்றது. 

இதையடுத்து போலீசார் அந்த காரை பின் தொடர்ந்து சென்ற நிலையில் காரில் இருந்தது ரவுடிகள் சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் என்பது தெரியவந்தது. போலீசார் தங்களை பின் தொடர்ந்து வருவதை பார்த்த ரவுடிகள் இருவரும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக போலீசார் தரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. போலீசார் நடத்திய என்கவுண்டரில் சோட்டா வினோத், ரமேஷ் உள்ளிட்ட இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two rowdys kill encounter in chennai kooduvanchery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->