'அனைத்து அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகள் இரண்டு நாட்கள் மக்களை சந்திக்க வேண்டும்'; நிதிஷ் குமார் உத்தரவு..!
Nitish Kumar has ordered that officials in all government offices must meet the public for two days
பீகார் மாநிலத்தில் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மக்களை சந்திக்கும் வகையில் அதிகாரிகள் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்களது வருகையை உறுதி செய்ய வேண்டும் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பஞ்சாயத்து மற்றும் டிவிசனல் அளவிலான அலுவலங்களில் கட்டாயம் வருகையை பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த நடைமுறை வருகிற 19-ந்தேதி முதல் கடைபிடிக்கப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

"கோரிக்கை மனுக்களுடன் அரசு அலுவலங்களுக்கு பொதுமக்கள் செல்லும்போது, அதிகாரிகள் இருப்பதில்லை என்பது அடிக்கடி கவனிக்கப்படுகிறது. மக்கள் கஷ்டங்களை எதிர்கொள்ளக் கூடாது. அதிகாரிகள் இரண்டு நாட்கள் அலுவலகத்தில் மக்களை சந்திக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்படும்.
இந்த சிஸ்டம் பொது மக்களுக்கு உதவி செய்யும் வகையில் இருக்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்" எனக் தெரிவித்துள்ளார்.
English Summary
Nitish Kumar has ordered that officials in all government offices must meet the public for two days