மாதவரத்தில் பரபரப்பு...! - ரவுடி 'தொப்பை கணேசன்' போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை...!
Tension Madhavaram Rowdy Thoppai Ganesan Shot Dead Police Encounter
சென்னை மாதவரம் பகுதியில் இன்று அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக, பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி “தொப்பை கணேசன்” காவலர்களின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும், மாதவரம் ரவுண்டானா அருகே பதுங்கியிருந்த கணேசனை பிடிக்க காவலர்கள் சிறப்பு குழுவுடன் சென்றதாகத் தெரிவிக்க்கப்படுகிறது. அப்போது காவலர்களை நோக்கி தாக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையாக காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ரவுடி கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடந்த ஜனவரி 30-ஆம் தேதி வசந்தா என்பவரின் வீட்டில் நடந்த துணிச்சலான கொள்ளை சம்பவத்தில் ரூ.25 லட்சம் பணமும், 15 சவரன் நகைகளும் பறிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கணேசன் தேடப்பட்டு வந்தார்.
அந்த வழக்கில் அவரை கைது செய்ய முயன்றபோதுதான் இந்த மோதல் ஏற்பட்டதாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரவுடி தொப்பை கணேசன் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Tension Madhavaram Rowdy Thoppai Ganesan Shot Dead Police Encounter