தறிகெட்டு ஓடிய கார் - இருவர் பலி; மூன்று பேர் படுகாயம்.!
two peoples died for accident in chennai anna nagar
நேற்று தமிழகத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், சென்னை அண்ணாநகரில் நள்ளிரவு 2.30 மணி அளவில் அதிவேகமாகச் சென்ற கார், சாலையோரம் நின்றிருந்த தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர் என்று ஆறு பேர் மீது மோதி விபத்து குள்ளானது.

இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் ஆறு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் காரில் இருந்தவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மது போதையில் காரை இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணம் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two peoples died for accident in chennai anna nagar