விருதுநகர் : நூதன முறையில் நகைத் திருடிய வடமாநில இளைஞர்கள் - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.!
two north indians arrested for steal gold in viruthunagar
நூதன முறையில் நகைத் திருடிய வடமாநில இளைஞர்கள் - கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சபரி அம்மாள். இவரது வீட்டின் அருகே இரண்டு வடமாநில இளைஞர்கள் நகைகளைப் பாலீஷ் போட்டுத் தருவதாக கூறிக்கொண்டு வந்துள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய சபரி அம்மாள், தனது தாலிச் செயினை பாலிஷ் போடுவதற்கு கொடுத்துள்ளார்.
இதனை வாங்கிய இளைஞர்கள் சிறிதுநேரம் கழித்து பாலீஷ் போட்டுவிட்டதாக நகையைத் திருப்பிக் கொடுத்துள்ளனர். அப்போது தான் சபரி அம்மாளுக்கு செயினைக் கொடுத்தபோது இருந்த எடையைவிட குறைவாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த வாலிபர்களிடம் கேட்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதிலளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்த்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது சபரி அம்மாள் 'திருடன், திருடன்' என்று சத்தம் போடவே, அங்கு திரண்ட பொதுமக்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மிதுன்குமார், சர்வன் குமார் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
two north indians arrested for steal gold in viruthunagar