பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்து.. இருவர் பரிதாப பலி..!
Two killed in fire at fireworks factory
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தால் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், மஞ்சள் உடையப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அந்த பகுதியில் உள்ள பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி அங்கு வேலை செய்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த ஐவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருகிறது.

இந்த சம்பவம் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Two killed in fire at fireworks factory