திண்டுக்கல்லில் சோகம் - குளத்தில் மூழ்கி சிறுமிகள் பலி.!
two girls dead body found in water at dindukal
திண்டுக்கல் மாவட்டம் பொன்மாந்துறை புதுப்பட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்தத் தகவலின் படி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையிரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறந்து கிடந்த சிறுமிகளை மீட்டனர். பின்பு அவர்களின் உடல்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சிறுமிகள் குறித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் புதுப்பட்டியை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் - சுமதி இருவரின் மகள்கள் ஓச்சம்மாள் மற்றும் தமிழ்செல்வி என்பது அடையாளம் காணப்பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது குளிக்க சென்றபோது தவறி விழுந்து சிறுமிகள் உயிரிழந்தார்களா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
two girls dead body found in water at dindukal