மாட்டுச் சாணத்தை கஞ்சா என விற்ற இருவர் உட்பட 4 பேர்‌ கைது.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலை குடோன் பகுதியில் போலீசார் வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்கள் பயணம் செய்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். 

அதில் பைக்கில் இருந்த பொட்டலங்களை எடுத்து விசாரணை செய்த போது ரூ.33 ஆயிரம் கொடுத்து கஞ்சா வாங்கி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். பிறகு போலீசார் அந்த பொட்டலத்தை பிரித்துப் பார்த்தபோது அதில் கஞ்சாவுக்கு பதிலாக மாற்று சாணம் இருந்தது தெரியவந்தது. 

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட இருவர் அளித்த தகவலின் படி கஞ்சா எனக்கூறி மாட்டு சாணம் விற்ற மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கஞ்சா புழக்கத்தால் குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two arrested for selling cow dung as ganja in Tiruppur


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->