கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த ஓட்டுநர் - 20 ஆண்டுகள் சிறை தண்டனை.!
twenty years jail penalty to dirver for sexual harassment case
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலநெடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் ஓட்டுநர் விஜயகுமார். இவர் அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டிற்கு விருந்தாளியாக வந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், விஜயகுமார் பாட்டி வீட்டிற்கு வந்த மாணவியை கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரை கைது செய்தனர்.
இருப்பினும், இந்த வழக்கின் விசாரணையானது அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்தன் விசாரணை செய்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது :-
"மாணவியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக விஜயகுமாருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தார். குற்றவாளி விஜயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருப்பினும் அவரது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
twenty years jail penalty to dirver for sexual harassment case