சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் 28 மின்சார ரெயில்கள் ரத்து.! - Seithipunal
Seithipunal


சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று முதல் 28 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே தெரிவித்து இருப்பதாவது:-

"சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று முதல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்பட்ட 14 மின்சார ரெயில்களும், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இயக்கப்பட்ட 14 மின்சார ரெயில்களும் என்று மொத்தம் 28 மின்சார ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

இதனால், திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை புதிய நேர அட்டவணைபடி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. மேலும், இருமார்க்கங்களிலும் ஏற்கனவே 228 ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 28 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுவதால் 200 ரெயில்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

twenty eight electric train cancelled in chennai


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->