பாய்சன் திமக, பாசிச பாஜக... எங்களை ஏமாற்றலாம் என நினைக்காதீர்கள்... விஜய் சொன்ன செய்தி!
TVK Vijay say about pm modi political stunt
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் தலைவர் விஜய் உரையாற்றியபோது, மக்கள் அரசியலின் சக்தியை கையில் எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
“எதிரிகள் யார் தெரியுமா? பாசிச பாஜகவும், விஷம் கலந்த திமுகவும் தான்” எனத் தொடங்கிய அவர், பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக கேள்வி கேட்டார்.
“மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளீர்கள். ஆனால் அந்த அதிகாரம் மக்களுக்கு நன்மை செய்ய பயன்படுத்தப்படுமா, இல்லையெனில் சில சமுதாயங்களை சதி செய்ய பயன்படுத்தப்படுமா?” என வினவிய விஜய், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக கட்சத்தீவை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று கோரினார்.
அதேபோல், நீட் தேர்வு காரணமாக பல இளம் உயிர்கள் அழிந்து வருவதை சுட்டிக்காட்டி, அதை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
மேலும், “மக்களின் தேவைகளை புறக்கணித்து, கூட்டணிகளின் விளையாட்டில் மட்டும் ஈடுபடுகிறீர்கள். நேரடி பாஜக கூட்டணியும், மறைமுக ஆர்எஸ்எஸ் அடிமைத்தனமும் ஒன்றுதான். ஊழல் கட்சிகளை மிரட்டி அடக்கி 2029 வரை ஆட்சி நடத்த நினைக்கிறீர்களா?” என்று பிரதமரை சவால் விட்டார்.
அவர் தொடர்ந்து, “எத்தனை கூட்டணிகள் செய்தாலும் தமிழ்நாட்டில் அது செயல்படாது. தாமரை இலையில் தண்ணி ஒட்டாது, அதுபோல தமிழக மக்களிடம் பாஜகக்கும், அதன் கூட்டணிக்கும் இடமில்லை” எனக் கூறினார்.
தமிழ்நாட்டை புறக்கணித்து, ஒரு எம்.பி. கூட வழங்காதது அநியாயம் என்றும், சங்க இலக்கியத்தை உருவாக்கிய மதுரையின் மண்ணில் அடையாளங்களையும் நாகரிகத்தையும் அழிக்க முயல்வது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் எச்சரித்தார்.
“எங்களை ஏமாற்றலாம் என நினைக்காதீர்கள், அந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது” என்று அவர் உறுதியாகக் கூறினார்.
English Summary
TVK Vijay say about pm modi political stunt