08 வயது சிறுமிக்கு சூடுவைத்தும் அடித்தும் கொடுமைப்படுத்திய பெற்ற தாய் மற்றும் அத்தை அதிரடி கைது..! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவரின் மனைவி மணிமேகலை. வயது 33. இவரது கணவர் ஜோதி கடந்த ஆண்டு இறந்துவிட்ட நிலையில், இவர்களுக்கு 08 வயதில் மகள் உள்ளார். குறித்த சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், சிறுமி, அவரது தாய் மணிமேகலை மற்றும் அவரது அத்தையான 30 வயதுடைய அனிதாஆகியோர் ஒன்றாக வசித்து வருகிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சிறுமியின் தாய் மணிமேகலை மற்றும் அத்தை அனிதா ஆகியோர் 08 வைத்து குழைந்த என்று கூட பாராமல் சிறுமியின் இரண்டு தொடையில் சூடு வைத்தும், அடித்தும் கொடுமை படுத்தியுள்ளனர்.

இதனை மணிமேகலையின் தாயார் வள்ளியம்மை சென்று கேட்டதற்கு நாங்கள் அப்படித்தான் செய்வோம், உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என கடுமையாக கூறியுள்ளனர்.

இது குறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பின்னர்அவர்கள் கடலூர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு மேற்பார்வையாளர் காளிதாசன் கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு சூடு வைத்த தாய் மணிமேகலை, சிறுமியின் அத்தை அனிதா ஆகியோரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother and aunt arrested for abusing and beating an 8 year old girl


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->