நெஞ்சை உலுக்கும் இருவேறு சம்பவங்கள்: மகன் மற்றும் கணவனை முதலைகளுடன் துணிச்சலாக சண்டையிட்டு காப்பாற்றிய வீரப்பெண்கள்..! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம், பீகாரில் நடந்த இரு சம்பவங்களின் போது மகன், கணவரை இழுத்து சென்ற முதலைகளுடன் சண்டையிட்டு மகன் மற்றும் கணவரை பெண் ஒருவர் போராடி காப்பாற்றியுள்ள சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பக்ரை மாவட்டம் கைரிகாட் பகுதியில் உள்ள தாகியா கிராமம் உள்ளது. இங்குள்ள காக்ரா ஆற்றின் கால்வாயில் 05 வயது சிறுவன் குளித்து கொண்டிருந்த்துள்ளான். திடீரென அவனது அலறல் சத்தம் கேட்க, அருகில் நின்றிருந்த அவனது தாய் மாயா, உடனடியாக ஓடி சென்று பார்த்த்துள்ளார்.

அப்போது, ஒரு ராட்சத முதலை, சிறுவனை தண்ணீருக்குள் இழுத்து செல்ல முயல்வதை கண்டு அதிர்ச்சியடைந்த்துள்ளார். மகனை முதலை இழுத்து செல்வதை பார்த்த தாய் சிறுத்தும் ஜோசிக்காமல் அடுத்த விநாடியே ஆற்றில் குதித்து மகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குறித்த பெண் தனது மகனை இறுக்கமாக பிடித்து கொண்டு, மகனை கவ்வி கொண்டிருந்த முதலையின் தாடையை குறிவைத்து தன்னிடம் இருந்த சிறு கம்பியால் ஓங்கி தாக்கியுள்ளார்.

கம்பியால் தாக்கியதை தாக்குப்பிடிக்க முடியாமல் முதலை, பிடியை தளர்த்தி சிறுவனை விடுவித்த்துள்ளது. பின்னர் ஆழமான பகுதிக்குள் சென்று முதலை மறைந்துள்ளது. முதலை தாக்கிவதால் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே சிறுவனைஅப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று, சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இதுகுறித்து அப்பகுதி வனத்துறையினர் கூறுகையில், சுமார் 07 அடி நீளமுள்ள அந்த முதலையை பிடிக்க அந்த கால்வாயில், 03 இடங்களில் வலை விரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இதே போன்று, பீகார் மாநிலம் மோதிபூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தில், ஒரு வீர பெண், தனது கணவரை முதலையிடம் இருந்து காப்பாற்றியுள்ளார். அங்கு மாதவபூர் கிராமத்தில் 45 வயதுடைய  சைபு என்பவர், தனது மனைவி சுர்ஜனா மற்றும் மைத்துனியுடன் ஒரு கால்வாயை கடக்க முயன்றுள்ளார். அப்போது, திடீரென வந்த ஒரு முதலை சைபுவின் காலை கடித்து இழுத்த்துள்ளது.இதனால் அலறி அவர், கூச்சலிட்ட்டுள்ளார். இதனை பார்த்து திர்ச்சியடைந்த சுர்ஜனா, தனது புடவையை தண்ணீரில் வீசி, கணவரை பிடித்து கொள்ள செய்துள்ளார்.

அதன் பின்னர் முதலையை தாக்கியுள்ளார். இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினரும் திரண்டு வந்து முதலையை கம்புகளால் தாக்கியதால், சைபுவை முதலை விட்டுவிட்டு தப்பியுள்ளது. இதனால் காயமடைந்த சைபு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கனமழையால் ஆறுகள், கால்வாய்களில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், முதலைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படலாம் என்றும், அவை நீர்நிலைகளை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Brave women who bravely fought crocodiles to save their son and husband in two separate incidents


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->