ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2025: பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்தியா பங்கேற்குமா..? விளையாட்டு அமைச்சகம் பதில்..!
Sports Ministry confirms India will participate in Asia Cup cricket match against Pakistan
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
08 அணிகள் பங்கேற்கின்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்தியா விளையாடுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் விளையாடும் என்பதை இன்று தெளிவுபடுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கிறது. இந்த தொடரில் பாகிஸ்தானுடன் மற்ற 07 அணிகளும் விளையாட உள்ளது. அதில் இந்திய அணி பாகிஸ்தானுடன் பங்கேற்பதை தடுக்க மாட்டோம் என்று விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் அணி வீரர்கள், இந்தியாவிலும் இருதரப்பு போட்டிகளில் கலந்துகொள்வதை தடை செய்யும் புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் நடந்தாலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருதரப்பு போட்டிகளில் விளையாட அனுமதிக்காது. இந்த கொள்கை உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அமைச்சக அதிகாரிகள் மேலும், தெரிவித்துள்ளனர்.
English Summary
Sports Ministry confirms India will participate in Asia Cup cricket match against Pakistan