தொண்டர்களுக்கு மத்தியில் ரேம்ப் வாக் செய்த தவெக தலைவர் விஜய்.!!
tvk leader vijay ramp walk in madurai conference
மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் த.வெ.க.வின் 2-வது மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக் கணக்கான தொண்டர்கள் வருகை தந்தனர்.

தற்போது வரை, மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க. மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், மாநாடு இசை நிகழ்ச்சியுடன் சுமார் 3.30 மணியளவில் மேளதாள வாத்தியங்கள் முழங்க தொடங்கியது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் மாநாட்டின் மேடைக்கு வருகை தந்தார். தொடர்ந்து, மதுரை மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் வாக் மேடையில் தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறு சென்றார். அப்போது, தொண்டர்கள் தூக்கி வீசிய கட்சி துண்டுகளை அணிந்தவாறும், தலையில் கட்டியபடியும் விஜய் சென்றார். .
English Summary
tvk leader vijay ramp walk in madurai conference