சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்வது எதற்காக? - தவெக தலைவர் விஜய் விளக்கம்.!!
tvk leader vijay explain why saturday election campaign
சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில், இன்று நாகை மற்றும் திருவாரூரில் இரண்டாவது கட்ட பிரசாரம்த்தை நடத்தி வருகிறார்.
இந்தப் பிரச்சாரத்தில், அவர், சனிக்கிழமைகளில் மட்டும் பிரசார பயணம் நடந்துவது தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது:- "உங்கள் எல்லாரையும் வந்து பார்க்கும்போது யாருக்கும் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் தான் வார இறுதி நாட்கள், ஓய்வு நாட்களில் பயணத்தை திட்டமிட்டுள்ளோம்.
அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் ஓய்வு நாளில் உங்களை சந்திக்க வருகிறேன்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
tvk leader vijay explain why saturday election campaign