மதுரை மாநாடு - போலீசாரின் கேள்விகளுக்கு தவெகவினர் பதில்.!! - Seithipunal
Seithipunal


த.வெ.க. தலைவர் விஜய், தனது கட்சியின் 2-வது மாநில மாநாடு மதுரையில் 25-ந்தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன் படி அந்தக் கட்சியினர் அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வந்தனர். இதற்கிடையே மாநாட்டிற்கு அனுமதி வழங்குமாறும், பாதுகாப்பு வேண்டியும் தவெக சார்பில் போலீசாரிடம் மனு வழங்கப்பட்டது. 

அப்போது போலீசார் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் மாநாட்டு தேதியினை மாற்றுமாறு கேட்டு கொண்டனர். அதனை ஏற்றுக்கொண்ட விஜய், மதுரையில் 21-ந்தேதி மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் தவெகவினர் மாநாடு குறித்த மனுவை கடந்த 5 ஆம் தேதி காவல்துறையிடம் அளித்தனர். 

அப்போது, போலீசார் சார்பில் மாநாடு நடக்க உள்ள இடம், எவ்வளவு பேர் பங்கேற்பார்கள். தொண்டர்களுக்கான வாகன நிறுத்துமிடம், உணவு, குடிநீர் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அம்சங்கள், கூட்டத்தில் பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட 42 கேள்விகளை முன் வைத்தனர்.

இந்த நிலையில், போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு தவெக தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது:- "மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய்யை தவிர வேறு எந்த முக்கிய பிரமுகர்களும் விருந்தினராக கலந்து கொள்ளவில்லை.

மாநாட்டில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி இல்லை.
பெண்களுக்கு என்று தனியாக பெண் தன்னார்வலர்கள், முதியவர்களுக்கு தனி இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் பகுதியில் வாகன நிறுத்தத்திற்கு சுமார் 400 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

300 பேருந்து 750 வேன்கள் மற்றும் ஆயிரம் இருசக்கர வாகனங்கள் வர வாய்ப்புள்ளது. உள்ளே மற்றும் வெளியே செல்வதற்கு என்று 18 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk answer submit to police for madurai conference


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->