#BigBreaking | டிடிவி, சசிகலாவுடன் இணைவு! அதுல ஒரு சிக்கல் இருக்கே - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், மூத்த நிர்வாகி  இன்று கூட்டாக பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, டிடிவி, சசிகலாவுடன் இணைய வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவிக்கையில், 

"டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணைவது என்பது இரு தரப்பும் கலந்து ஆலோசிக்க கூடிய விவகாரம். சசிகலாவை பொறுத்தவரை அவர் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்தும், பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

சசிகலாவுடன் நாங்கள் இணைந்தால் அவர் தொடர்ந்து வழக்கு செல்லாது ஆகிவிடும். அதனால் இணைவதற்கு வாய்ப்பில்லை. டிடிவி தினகரன் பொருத்தவரை, அவர் ஒரு கட்சி கொண்டு நடத்திக் கொண்டிருக்கிறார்.

அவருடன் இணைந்து செயல்படலாம். தவிர நாங்கள் அவரின் கட்சிகள் இணைவதோ அல்லது எங்கள் கட்சியில் அவரை இணைவது என்பது கிடையாது.

இப்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனி கட்சிகளாக இருப்பது போல் (சிபிஐஎம் சிபிஐ என்று இருப்பது போல்) நாங்கள் தனித்  தனித்தனியாக செயல்படலாம், இணைந்து செயல்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது" என்றார்.
 

மேலும் சில செய்திகளை காண :

#BigBreaking | அடுத்து என் நடவடிக்கை இதுதான்! ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!

#BigBreaking | பொதுச்செயலாளர் தேர்தலுக்கு சிக்கல்! ஓபிஎஸ் தரப்பு கூட்டாக பேட்டி!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Sasikala OPS Joint PR press meet


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->