#BREAKING | அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் - டிடிவி தினகரன் சந்திப்பு! அதிர்ச்சியில் அதிமுக! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களின் பேராதரவோடு அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனை தேர்தல் ஆணையமும், சில நீதிமன்ற தீர்ப்புகளும் உறுதி செய்துள்ள நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் அதிமுகவை மீட்டெடுக்க தர்மயுத்தம் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதில் ஒரு திடீர் திருப்பமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஓ பன்னீர்செல்வம் சந்தித்ததுஅமைந்துள்ளது.

மேலும், இருவரும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ் - டிடிவி சந்திப்பின்போது, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களில் முக்கியமானவரான வைத்திலிங்கம் உடன் செல்லாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் கேள்விகளை கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், டிடிவி தினகரனை ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் நேரில் சந்தித்து திருமண பத்திரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளார்.

இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விடுத்துள்ள அந்த செய்தி குறிப்பில், "அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்" என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி குறிப்பில், "அம்மா மக்கள் முன்னேற்றக்  கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களை, அ.இ.அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.ஆர்.வைத்தியலிங்கம் MLA அவர்கள் சென்னை அடையாறு இல்லத்தில் நேரில் சந்தித்து அவரது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Vaithiyalingam meet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->