தீக்கிரையான கடைகள்.. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் உரிமையாளர்கள் - டிடிவி கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி கடற்கரை பகுதியில்  ஏற்பட்ட விபத்தில் 70 கடைகள் தீக்கு இரையானது. இதனால் கடை உரிமையாளர்கள் மொத்தமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும், கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தற்போது வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், உயிரிழப்பு இல்லாத பெரும் வாழ்வாதார சோகம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், அங்கு கடைவைத்துள்ள நபர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கடை வாடகை வசூலிப்பதை 6 மாதம் இரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை டிடிவி தினகரன் வலிறுத்தியுள்ளார். 

இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிவு செய்துள்ள ட்விட்டில், " கன்னியாகுமரி கடற்கரை பகுதியில்  ஏற்பட்ட விபத்தில் கடைகள் தீக்கிரையான நிகழ்வு மிகுந்த வருத்தமளிக்கிறது. கொரோனா சூழலுக்குப் பிறகு வியாபாரம் மெல்ல தொடங்கியிருந்த நேரத்தில்,  நேரிட்டிருக்கும் இத் தீ விபத்தினால் கடை உரிமையாளர்கள் மொத்தமாக  தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். 

அவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்குவதுடன், வங்கிக் கடன் உதவியும் ஏற்பாடு செய்து தரவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட வியாபாரிகளிடமிருந்து கடை  வாடகை வசூலிப்பதை குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Request to TN Govt help to Kanyakumari Shop owners affected Loss fire accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal