அம்மாவின் பொற்கால ஆட்சியை ஏற்படுத்த உறுதியேற்போம் - டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் எல்லாம் நிறைந்து வாழும் தங்கத்தாரகை, தமிழக மக்களின் நலன்களை காத்து நின்ற தனிப்பெரும் ஆளுமை, எளிய மக்களின் துயர் துடைக்க எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய ஏழைகளின் ஏந்தல், துணிவும், தெளிவும் நிறைந்த கம்பீரத் தாய் நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நம்மை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்தாலும், இப்போதும் ஒவ்வொரு கணமும் நமக்குள் இருந்து நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் போற்றி வணங்கும் வகையில், அவர்களது நினைவு நாளான வருகிற 05.12.2020 சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு சென்னை, மெரினா கடற்கரையிலுள்ள அம்மா அவர்களின் நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் அஞ்சலி செலுத்தவிருக்கிறோம்.

இந்நிகழ்வில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி போதிய சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கழகத்தினர் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஒவ்வோர் ஊர்களிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்திடுவோம். தமிழ்நாட்டின் நலன்களை காத்திட அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் நாம் ஏற்படுத்திட மனதார உறுதியேற்போம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran Request to AMMK Party Members 1 December 2020


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->