ஆர்.எம்.வீரப்பன் மறைவு - டிடிவி, அண்ணாமலை இரங்கல்!
TTV AND ANNAMALAI MOURNING TO RM VEERAPPAN
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய ஆர்.எம்.வீரப்பன்.
மேலும், எம்ஜிஆர் நடித்த ரிக்சாக்காரன், இதயக்கனி உள்ளிட்ட படங்களையும் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்துள்ளார்.
எம்ஜிஆர் மட்டுமின்றி சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ் ஆகியோரின் படங்களையும் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்துள்ளார்.கமல் நடிப்பில் வெளியான காக்கி சட்டை, காதல் பரிசு உள்ளிட்ட படங்களையும் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இன்று உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 97.

இந்நிலையில், ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரின் அந்த இரங்கல் செய்தியில், "தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தவரும், எம்.ஜி.ஆர் கழகத் தலைவருமான மூத்த அரசியல்வாதி திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
நாடகத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து துணிவு, கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து உச்சம் தொட்ட திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்களை இழந்துவாடும் எம்.ஜி.ஆர் கழகத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "
தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
English Summary
TTV AND ANNAMALAI MOURNING TO RM VEERAPPAN