'படத்தின் ரிலீஸ்க்கு பிறகு எனக்கு போன் போட்டு திட்டுங்கள், அனல் அரசுக்கு நிச்சம் விருது': தயாரிப்பாளர் சிவா பேச்சு..!
After the release of the movie Phoenix call me and scold me says Producer Siva
சூர்யா விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் 'பீனிக்ஸ்'. இந்த படத்தை அனல் அரசு இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சிவா, இயக்குநர் பாண்டிராஜ், எச்.வினோத், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது கூறியுள்ளதாவது, 'பீனிக்ஸ்' மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட முதல் 10 படங்களில் 'ஃபீனிக்ஸ நிச்சயம் இடம்பெறும்.படத்தை முழுவதுமாக பார்த்துட்டேன். படத்தை அனல் அரசு 100 சதவீதம் நேர்த்தியாக எடுத்துள்ளார். திரில்லராக இந்த படம் உருவாகியுள்ளது. நான் சொல்வது உண்மையில்லை என்றால் படத்தின் ரிலீஸ்க்கு பிறகு எனக்கு போன் போட்டு திட்டுங்கள் என்று பேசினார்.
அத்துடன், படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பான வேலையை செய்துள்ளதாகவும், இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர் என்றும், இந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குநருக்கான விருதை அனல் அரசு நிச்சயம் பெறுவார் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் சூர்யா விஜ சேதுபதிக்கு மிகப் பெரிய எதிர்காலம் உள்ளதாகவும், தமிழ் சினிமாவில் தான் அடிக்கடி பார்க்கும் படம் 'மகாராஜா'. இனிமேல் அடிக்கடி பார்க்கும் படமாக 'பீனிக்ஸ் இருக்கும் என்றும் பேசினார்.
மேலும், சாம் சிஎஸ் இந்த படத்துக்கு சிறப்பாக இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி தமிழ் சினிமாவிற்கு நிறைய விஷயங்களை கொடுத்துள்ளார். அதேப்போல தற்போது அவரது மகனையும் கொடுத்துள்ளார் என்று தெரிவித்தார். அதாவது, தமிழ் சினிமாவில் நான் மிகவும் நேசிக்கும் மனிதர் விஜய் சேதுபதி என்று குறிப்பிட்ட அவர், விஜய் சேதுபதியை தாண்ட அவரது மகன் மிகப் பெரிய ஆளாக வருவார். அனைவரும் திரையரங்கில் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சிவா பேசினார்.
English Summary
After the release of the movie Phoenix call me and scold me says Producer Siva