திடீர் சந்திப்பு! மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஏ.ஆர் ரகுமானை சந்திக்க காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு, திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகேயுள்ள அய்யர்கண்டிகை கிராமத்தில் சொந்தமான பிரமாண்ட ஸ்டூடியோ உள்ளது.

அங்கு நேற்று தனது ஸ்டூடியோவுக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான் திரைப்படம் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் திடீரென மாலை 6.30 மணியளவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் அங்கு நேரில் வந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்தார்.

இந்த சந்திப்பு இரவு 7.10 வரை நீடித்தது.மேலும், இவர்களின் இந்த திடீர் சந்திப்பு உறுதிபடுத்தப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு நமது கலாசாரம் சம்பந்தப்பட்ட 'சத்யம், சிவம், சுந்தரம் எனும் வெவ்ஸ்' என்ற குறும்படத்துக்கு இசை அமைத்து கொடுத்ததால் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை அவர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நன்றி சொன்னதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.  

இருப்பினும், இதற்கான எந்த தகவல்களும்  இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudden meeting What reason for Union Minister State L Murugan meeting AR Rahman


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->