பெண் தோழியுடன் டிடிஎஃப் வாசன் பைக்கிலேயே அட்டகாசம்.! அச்சமடையும் பொதுமக்கள் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


டிடிஎஃப் வாசன், விலையுயர்ந்த எஞ்சின்களுள்ள அதிக திறன் கொண்ட பைக்குகளில் சாலைகளில் பயணிக்கும் சாகசக்காரர். இவருக்கு பள்ளி குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இளைய தலைமுறையினர் மத்தியில் பெரும் ரசிகர்கள் உள்ளனர். 

சமீபத்தில், ஜி.பி. முத்துவை பைக்கில் உட்கார வைத்து, சாலையில் செல்பவர்களை பயமுறுத்தும் வகையில், அதிவேகமாக பைக்கை ஓட்டிய சம்பவம், மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை-திருத்தணி நெடுஞ்சாலையில் தனது தோழியுடன் பைக்கில் சென்றபோது காரில் இருந்து இரு கைகளையும் விட்டு தோளில் இருந்த பையில் இருந்து ஒரு பொருளை எடுத்துள்ளார். பின்னர் பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த தோழியிடம் கொடுத்துள்ளார். 

இதை வீடியோவாகவும் எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆபத்தான வீடியோக்களை வெளியிடுபவர்களை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

சாலைப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்துபவர்கள் அல்லது இளைஞர்களை தவறாக வழிநடத்துபவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ttf vasan rude behavior on road


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->