அறங்காவலர் பணிக்கான விண்ணப்பத்தை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு.!
trustee job application publish on websites chennai high court order
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்களை நியமனம் செய்வது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு உள்ளிட்டோர் அடங்கிய அமர்வின் முன்பு நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அந்த விசாரணையின் போது, அறநிலையத்துறை தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், 'கோவில் அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் தொடர்பு குறித்த கேள்வி சேர்க்கப்பட்டுவிட்டது. மேலும், பத்திரிகைகளில் விளம்பரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இதேபோல், அறங்காவலர் பணிக்கான விண்ணப்பங்களை இணையதளங்களில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. முதலில், 10 மாவட்டங்களில் அறங்காவலர்கள் தேர்வுக்கான தேர்வுக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த வழக்கு குறித்து நீதிபதி உத்தரவிடப்பட்டுள்ளதாவது, "மீதமுள்ள அனைத்து மாவட்டங்களில் விரைவில் தேர்வு குழுக்கள் அமைக்க வேண்டும்.
இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை பிப்ரவரி மாதம் 8-ந்தேதிக்குள் இணையதளங்களில் வெளியிட வேண்டும்" என்று உத்தரவிட்டு மேலும், இந்த வழக்கு குறித்த விசாரணையை பிப்ரவரி 8-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
English Summary
trustee job application publish on websites chennai high court order