ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி ஆபரணங்களின் விலை; மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்..!
Prices of Gold and Silver Jewelry Drop Sharply in a Single Day
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் விலை இன்று (19.03.2026) காலை சடுதியாக குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4-5 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருவது நகைப் பிரியர்களிடையே ஆறுதலை கொடுத்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,570க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று (19.03.2026) காலை, 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300க்கும், சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (19.03.2026) மாலை, ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.400 குறைந்து ரூ.13,900க்கும், சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,11,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.395 குறைந்து ரூ.11,585க்கும், சவரனுக்கு ரூ.3,160 குறைந்து ரூ.92,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதயநாள் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
English Summary
Prices of Gold and Silver Jewelry Drop Sharply in a Single Day