சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை! திருமணத்திற்கு முன்பே தாயான கல்லூரி மாணவி விஷம் வைத்து கொலை! - Seithipunal
Seithipunal


திருச்சி அருகே சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்ட நிலையில், குழந்தையை பெற்ற கல்லூரி மாணவி விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம், முக்கொம்பு அருகே வாய்க்கால் கரை ஓரம் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது.

இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். குழந்தையை மீட்ட போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனுடைய இளமனூர் பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்ற கல்லூரி மாணவி விஷம் குடித்ததில், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மீட்கப்பட்ட குழந்தை கலைவாணியின் குழந்தை என்பது தெரியவந்தது.

மேலும் திருமணத்திற்கு முன்பே கலைவாணி குழந்தை பெற்றதும் அம்பலமானது. மேலும் போலீசாரின் விசாரணையில் மாணவி கலைவாணி இறப்பதற்கு முன்பு, 'தன்னை இரண்டு பேர் விஷ கொடுத்து கொலை செய்ததாக' வாக்குமூலம் அளித்ததன் பெயரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

trichey college girl killed 2022


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->