கன மழையால் சாய்ந்த மரங்கள்.. உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்த அனிபால் கென்னடி எம்எல்ஏ!
Trees toppled by heavy rain Immediate removal action taken by Anipal Kennedy MLA
புதுச்சேரி உப்பளம் தொகுதி கிறிஸ்துவ கல்லறையில் கன மழையால் சாய்ந்த மரங்களை அனிபால் கென்னடி எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு அகற்ற நடவடிக்கை எடுத்தார்.
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் குள்ள கிறிஸ்துவ கல்லறையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் விசுவாசிகள் தங்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து “கலலறை திருவிழா” எனும் சிறப்பு நிகழ்வை கொண்டாடுவது வழக்கம். அந்த நாளில் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்வதும், மலர்கள் வைத்து மரியாதை செலுத்துவதும் வழக்கமாகும்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள கல்லறை திருவிழாவை முன்னிட்டு கல்லறையில் சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் பலத்த காற்றினால், கிறிஸ்துவ புனித கல்லறையின் சில பகுதிகளில் மரங்கள் சாய்ந்து, சுத்தம் செய்வதற்கான பணிகள் தற்காலிகமாக நின்று போனது.
இந்த தகவலை அறிந்த உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி MLA அவர்கள் நேரில் கல்லறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நகராட்சி பொறியாளர்களுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு, சாய்ந்த மரங்களை உடனடியாக அகற்றி, நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள சமாதி திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை தடையின்றி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனை ஏற்று நகராட்சி அதிகாரிகள் தேவையான பணிகளை விரைவாக செய்து முடிப்பதாக உறுதி அளித்தனர்.
இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் காளப்பன், ராகேஷ், கழக உறுப்பினர்கள் செழியன், மோசிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
English Summary
Trees toppled by heavy rain Immediate removal action taken by Anipal Kennedy MLA