உறக்கத்தில் பயணம்… விழித்தபோது விபத்து: தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கோர விபத்து...!
Traveling while asleep accident upon waking horrific accident involving Omni bus national highway
சென்னையிலிருந்து சேலம் நோக்கி பயணித்த ஆம்னி பஸ், கள்ளக்குறிச்சி மாவட்டம் பாதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த போது விபத்தில் சிக்கியது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை நடுவிலுள்ள சென்டர் மீடியனில் மோதியதுடன், அதிர்ச்சியூட்டும் வேகத்தில் சாலையிலேயே கவிழ்ந்தது.
நள்ளிரவு நேரம் என்பதால், பஸ்சில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் திடீரென எழுந்து அலறினர். காயமடைந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பிய நிலையில், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.இந்த கோர விபத்தில், நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த ஜியாவுதீன் (25) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து, அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்தில் சிக்கிய பேருந்து நடு சாலையில் கவிழ்ந்து கிடந்ததால், திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலையின் இருபுறங்களிலும் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் கிரேன் மூலம் பேருந்து அகற்றப்பட்டதையடுத்து, நீண்ட நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.
English Summary
Traveling while asleep accident upon waking horrific accident involving Omni bus national highway