சொல்லாமல் விடுப்பு எடுத்தால் நடவடிக்கை - ஓட்டுநர், நடத்துனர்களுக்கு செக் வைத்த போக்குவரத்து துறை .!
transport department say action against govt bus driver conductor for leave
அரசு போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் முன் அறிவிப்பு இன்றி விடுப்பு எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"அடிக்கடி பணிக்கு வராமல், முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தினசரி இயக்க வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக கண்ட்ரோல் சார்ட்டில் ஓட்டுனர், நடத்துனர்களிடம் கையொப்பம் பெற வேண்டும்.
மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும். முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும்" என்று போக்குவரத்துக்கு கழகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
transport department say action against govt bus driver conductor for leave