செப் 7 ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடக்கம்.! நாளை முதல் தொடங்கலாம் என சென்னை ரயில்வே அறிவிப்பு.!
train ticket booking tomorrow onwards
கொரோனா ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து இயங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மாவட்டங்களுக்கு இடையே சென்று வர வழிவகை செய்ய வேண்டும் என்று தனியார் பேருந்து சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இ-பாஸ் இல்லாமல் மாவட்டங்களுக்கு இடையே ஏற்கனவே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது போக்குவரத்தும் மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யவும், வரும் 7 ஆம் தேதி முதல் பயணிகள் இரயில் போக்குவரத்து மாநிலங்களுக்குள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மெட்ரோ இரயில் 7 ஆம் தேதி முதல் இயங்கவுள்ள நிலையில், புறநகர் மற்றும் பயணிகள் இரயில் சேவையும் துவங்கவுள்ளது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பேருந்து மற்றும் இரயில் போக்குவரத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்தை அனுமதி அளித்ததை தொடர்ந்து சென்னையில் நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் டிக்கெட் கவுன்டர்கள் செயல்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது
நாளை முதல் ரயில் பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுக்களை முன்பதிவு டிக்கெட் மையங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
train ticket booking tomorrow onwards