இரயில் பயணிகளிடம் தொடர் 'கைவரிசை'...! சாமர்த்தியமாகச் சுற்றிய செல்போன் திருடன் சென்னை போலிசாரிடம் சிக்கியது எப்படி...?
Train passengers being scammed How clever cell phone thief caught by Chennai police
ரெயிலில் பயணம் செய்யும் பொதுமக்களை குறிவைத்து, தண்டவாள ஓரத்தில் நின்றபடி குச்சியால் தாக்கி செல்போன்களை பறித்துச் சென்றதாக கூறப்படும் தொடர் கொள்ளை சம்பவங்களுக்கு சென்னை காவலர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இந்த வழக்கில், ஏற்கனவே 25 வழக்குகள் நிலுவையில் உள்ள 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையேயான ரெயில் பாதையில், பயணிகளிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. ரெயில்கள் சென்று கொண்டிருக்கும்போது தண்டவாள ஓரத்தில் மறைந்து நிற்கும் நபர் ஒருவர், பயணிகளை குச்சியால் தாக்கி அச்சுறுத்திவிட்டு, அவர்களிடம் இருந்த செல்போன்களை பறித்துச் செல்வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், பல்வேறு தகவல்களைச் சேகரித்து, சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தையும் கண்காணித்து வந்தனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில், ரெயில் பயணிகளை குறிவைத்து செல்போன்களை பறித்ததாகக் கூறப்படும் ஹரி பாபு (24) என்ற இளைஞரை காவலர்கள் கைது செய்தனர்.
பேசின்பிரிட்ஜ்- வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள ஓரத்தில் நின்று, ரெயில் பயணிகளை குச்சியால் தாக்கி செல்போன்களை பறித்துச் சென்றதாக அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஹரி பாபு மீது ஏற்கனவே 25 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த செல்போன் பறிப்பு சம்பவங்களில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Train passengers being scammed How clever cell phone thief caught by Chennai police