டெல்லியில் தலைசுற்ற வைக்கும் மெகா வேட்டை...! ரூ. 1,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்... சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேர் சிக்கியது எப்படி...? - Seithipunal
Seithipunal


டெல்லியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மிகப்பெரிய பதுக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1,000 கோடி மதிப்பிலான சுமார் 30 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகளை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

சர்வதேச போதைப்பொருள் கும்பல்களிடமிருந்து இந்தியாவுக்குள் பெருமளவில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக டெல்லி காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும், இவ்வாறு கடத்தி வரப்படும் போதைப்பொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, ‘ஆபரேஷன் வஜ்ரா’ என்ற பெயரில் காவலர்கள் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சந்தேகத்திற்கிடமான இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.அப்போது, ஒரு குடோனில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கிருந்து சுமார் 30 ஆயிரம் கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பெரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடவடிக்கையில் தொடர்புடையதாகக் கூறப்படும் கேரளாவைச் சேர்ந்த உமேஷ்குமார், பிரதவுஸ் உள்ளிட்ட 3 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dizzying mega hunt Delhi 1000 crore worth drugs seized How 3 members international smuggling gang caught


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->