காஞ்சிபுரத்தில் சோக சம்பவம்...! - வயல்வெளியில் மின்னல் தாக்கி 12ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு...! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின்னல் தாக்கிய சோக சம்பவம் ஒரு இளம் உயிரை பறித்துள்ளது. ஊவேரி சத்திரம் ஊராட்சிக்குட்பட்ட புத்தேரி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகன் விஸ்வநாதன் (18), காஞ்சிபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து சமீபத்தில் தேர்வு எழுதியிருந்தார்.

எதிர்கால கனவுகளுடன் இருந்த இந்த இளைஞர், குடும்பத்தின் வயல்வெளியில் நெல் அறுவடைக்குப் பிறகு வைக்கோலை சேகரிக்கச் சென்றபோது திடீரென மின்னல் தாக்கி விபத்தில் சிக்கினார்.

கடுமையாக காயமடைந்து மயங்கி விழுந்த விஸ்வநாதனை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை பலனளிக்காமல், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த துயரச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், பொன்னேரி கரை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மின்னல் தாக்கி இளம் மாணவர் உயிரிழந்த இந்த சம்பவம், அந்தப் பகுதியில் உள்ள மக்களிடையே ஆழ்ந்த துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragic incident Kanchipuram 12th grade student tragically died after being struck by lightning field


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->