பருவத மலையில் நடந்த விபரீதம்... வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்... சடலமாக மீட்பு...! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் சுமார் 4,560 அடி உயரம் கொண்ட பருவதமலை மீது பிரபல மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஷேச நாட்களில் வந்து மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் பருவத மலைக்கு நேற்று முன்தினம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சென்னை வடபழனியை சேர்ந்த 36 வயதுடைய தங்கதமிழ்செல்வி மற்றும் இந்திரா உள்பட15 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.அங்கு தரிசனம் செய்து விட்டு கீழே இருக்கும்போது பலத்த மழை பெய்தது.

இதனால் மலை அடிவாரத்தில் மழை கால்வாயில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.அப்போது சென்னையைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் இந்த கால்வாயை கடக்க முயற்சி செய்தனர்.அதனால் ஒருவர் பின் ஒருவராக கையை கோர்த்து பிடித்துக் கொண்டு வெள்ளத்தில் இறங்கி கடந்து வந்தனர்.

அச்சமயம்,தங்கதமிழ்ச்செல்வி மற்றும் இந்திரா இருவரும் திடீரென நிலை தடுமாறியதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த குழுவினர் காவல் நிலையத்திற்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து வந்த அவர்கள் 2 பேரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு,சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த இந்திரா என்பவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சென்ற மற்றொருவரை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பருவதமலையில்,பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tragedy that happened Paruvatha Hills woman swept away by flood Rescued corpse


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->