திருமணம் முடிந்த 15 நாட்களில் நடந்த துயரம்...! லாரி மோதி புதுமணத் தம்பதி பலியான கோர விபத்து...! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி மனோகரன் (32). இவருக்கும், இவரது உறவினரான மனிஷா (20) என்பவருக்கும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், கடந்த 8-ஆம் தேதி இரவு இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டியிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கோவில்பட்டி-சாத்தூர் சாலையில் தனியார் கல்லூரி அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி இவர்கள் மீது மோதியது.இந்த கோர விபத்தில் மனோகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த மனிஷா, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஒரே விபத்தில் புதுமணத் தம்பதி உயிரிழந்த சம்பவம் கஞ்சம்பட்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரான தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அபூபக்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy that happened 15 days after wedding newlywed couple died horrific accident after being hit by lorry


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->