பணி முடித்து வீடு திரும்பிய பெண்ணுக்கு நடந்த துயரம்...! லாரி சக்கரம் ஏறி உயிரிழப்பு!
Tragedy befell woman returning home after work She died after being run over by lorry
சென்னை மாதவரத்தைச் சேர்ந்த இளம்பெண் சிவரஞ்சனி, தனியார் வணிக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வழக்கமாகப் போலவே, நேற்று இரவு பணியை முடித்து ஸ்கூட்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர், மாதவரம் மஞ்சம்பாக்கம் ரவுண்டானா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென பின்புறத்தில் இருந்து வேகமாக வந்த டேங்கர் லாரி ஸ்கூட்டியை மோதி கடுமையாகத் தாக்கியது.

அதிர்ச்சி தரும் அந்த விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த சிவரஞ்சனி சாலையிலே வீழ்ந்தார். அடுத்த நொடியில், லாரியின் பெரும் சக்கரம் அவரது தலையின் மீது ஏறிச் செல்ல, அவர் அங்கு உடனடியாக உயிரிழந்தனர்.
பாதசாரிகளையும் சுற்றுப்புற மக்களையும் பதறவைத்த இந்த கொடூரமான விபத்து, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சிவரஞ்சனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் சென்ற நிலையில், அவரை பிடிக்க சிறப்பு குழுவை அமைத்து போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
Tragedy befell woman returning home after work She died after being run over by lorry