சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. எந்தெந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம்..! - Seithipunal
Seithipunal


கனமழை காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருவதால்  அங்குள்ள சாலைகளில் மழை நீர் தேங்கி மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிகக்ப்பட்டுள்ளது. சென்னையில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு,

ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மேட்லி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, 2-வது அவென்யூவை நோக்கி போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது.

வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆற்காடு ரோடு செல்ல கேசவர்திணி சாலை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.

வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர் மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன்காரணமாக கே.கே.நகர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில் உதயம் தியேட்டர் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது.

இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்க் செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்கநல்லூர் நோக்கி போக்குவரத்து திருப்பி விடப்படுகின்றன.

அசோக் நகர் போஸ்டல் காலனி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக கடந்து செல்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Traffic has been diverted in Chennai due to heavy rains


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->