2 மணி நேர மழைக்கே ஸ்தம்பித்த கோவை... பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்..! - Seithipunal
Seithipunal


தொடர்ந்து இரண்டு மணி நேரமாக பெய்த கனமழையால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் கோவையில் கனமழை பெய்து வருகிறது. மதியம் இரண்டு மணி நேரங்கள் கனமழை பெய்தது.

இதனால்,  நிலையம், காந்திபுரம், லட்சுமி மில், புளியகுளம் ,வடவள்ளி, இடையர்பாளையம், டவுன்ஹால், பெரிய கடை ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை  பெய்தது. இதனால், பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால், கோவையின் பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவையின் பிரதான சாலைகளில் உப்பிலிபாளையம் மேம்பாலம், மற்றும் அரசு மருத்துவமனை ரயில்வே பாலம் ஆகியவற்றில் மழை நீர் தேங்கியதால் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Traffic congestion during heavy rains


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->