ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்ததால் குஷியில் சுற்றுலாப் பயணிகள்...!!!
Tourists distress water levels Okenakkal increase
தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு, கர்நாடகா மாநிலம் காவிரி கரையோரங்களில் பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து கடந்த 1 வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 2000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து இன்றும் அதே அளவு தண்ணீர் மட்டம் நீடித்து வந்தது.
இதில் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வந்து கொட்டுகிறது.மேலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்து வருகின்றனர்.
இதில் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் மக்கள் ரசித்து மகிழ்ந்தனர்.அதன் பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Tourists distress water levels Okenakkal increase