இரண்டு சுற்றுலா தலங்களுக்கு செல்ல திடீர் தடை! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ஏரி பகுதியில், மூன்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் அப்பகுதிக்கு செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை, வனத்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

அதேபோன்று நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான தொட்டபெட்டாக்கு செல்லும் கோத்தகிரி முதல் தொட்டபெட்டா சிகரம் வரை உள்ள மூன்று கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் நாளை முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்வதற்கான பாதை தற்காலிகமாக மூடப்படும் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tourists are prohibited from visiting Kodaikanal and Thoddapetta


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->